"தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவும் – ஜோதிகாவும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து ‘உயிரிலே கலந்தது’, ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். பின்னர் இருவரும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். பல வருடங்களாக தனித்தனியாக நடித்து வந்த இந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்றாக இணைத்து படம் நடிக்க தயாராகியுள்ளனர்.தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சூர்யா – ஜோதிகாவை மீண்டும் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.